ஒரு முகநூல் பதிவின் மூலம், பிராந்தியத்தின் செழிப்புக்காக இந்த ஆண்டு ஆசியான் தலைவராக நாட்டின் பிம்பத்தை அரசாங்கம் மேம் படுத்துவதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூரின் பிரதமர் லாரன்ஸ் வோங், இந்தோனேசியாவின் ஜனாதிபதி பிரபோவோ சுபியான்டோ மற்றும் ஜப்பானின் பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகிய மூன்று வெளிநாட்டு தலைவர்கள் இந்த வாரம் மலேசியாவுக்கு விஜயம் செய்திருப்பது புதிய ஒத்துழைப்பை ஆராய்வதில் நாட்டிற்கு குறிப்பிடத்தக்கது என்று அன்வர் கூறினார்.
எங்கள் நட்பு நாடுகளான சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் ஜப்பானின் தலைவர்களிடமிருந்து நாங்கள் வருகைகளைப் பெற்றபோது மலேசியாவுக்கு அர்த்தமும் உற்பத்தித்திறனும் நிறைந்த ஒரு வாரம் இது,
ஏற்கனவே நெருக்கமான உறவுகளை மேலும் வலுப் படுத்துவதோடு மட்டுமல்லாமல், மக்களுக்கும் நாட்டிற்கும் பயனளிக்கும் ஒத்துழைப்பின் புதிய அத்தியாயத்தில் இந்த சந்திப்பு மற்றும் விவாதங்கள் கவனம் செலுத்தின என்றார்
மலேசியா ஜனவரி 1, 2025 அன்று ஆசியான் தலைவராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றது, இது 1977,1997,2005 மற்றும் 2015 க்குப் பிறகு ஐந்தாவது முறையாக இந்த பதவியை வகிக்கிறது.


