ஷா ஆலம், ஜன 10: நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிலாங்கூர் மாறும். மேலும், இம்மாநிலம் குறைக்கடத்தி தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் பங்கு வகிக்கும்.
சிலாங்கூர் வேகக் கொள்கையின் ஆதரவுடன் தொழில்துறைப் பகுதிகளைத் திட்டமிடுவதற்கான ஒப்புதல் காலத்தை குறைப்பதன் மூலம், சிலாங்கூர் மாநிலம் நாட்டிற்கு ஒரு முக்கியமான மையமாக மாறத் தயாராக இருப்பதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.
பூச்சோங் மற்றும் சைபர்ஜெயாவில் ``taman reka bentuk litar bersepadu`` (IC) நிர்மாணிப்பது மலேசியாவுக்கு சர்வதேச அளவில் போட்டியிட உதவும் என்பது தெளிவாகிறது.
"நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சிலாங்கூர், குறைக்கடத்தி தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் தொடர்ந்து மூலோபாயப் பங்கை வகிக்கும்" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முகநூலில் தெரிவித்துள்ளார்.
நேற்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற மலேசிய பொருளாதார மன்றம் 2025இல் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.
சிலாங்கூர் பட்ஜெட் 2025 இன் விளக்கக்காட்சியின் போது,தொழில்துறை பகுதிகளுக்கான திட்டமிடல் அனுமதியின் ஒப்புதல் காலத்தை 3.5 மாதங்களில் இருந்து 14 நாட்களாக குறைக்க சிலாங்கூர் வேகக் கொள்கையை அமிருடின் அறிமுகப்படுத்தினார்.


