புத்ராஜெயா, ஜன 10 : லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் வரலாறு காணாத நிலையில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மலேசியா சார்பில் பிரதமர் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தற்போது, தென் கலிஃபோர்னியாவே காட்டுத் தீயில் அழிந்து வருகிறது.
இத்துயரத்தில் மலேசியாவும் பங்குக் கொள்கிறது. சீக்கிரமே காட்டுத் தீயின் சீற்றம் தணிந்து, அங்கு இயல்பு நிலைத் திரும்பப் பிராத்திப்பதாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டார்.
கடுமையான வறட்சிக்கு மத்தியில் வீசிய புயல் காற்றினால், வட மற்றும் மேற்கு லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ தீவிரமடைந்துள்ளது.
இதனால் அங்கிருந்து 30,000 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதுவரை ஐவர் உயிரிழந்துள்ள நிலையில், வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஆயிரக்கணக்கான இருப்பிடங்கள், வர்த்தகத் தளங்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் தீயில் அழிந்துப் போயுள்ளன.


