ஷா ஆலம்,ஜன 10: சுற்றுலா சிலாங்கூரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (KPE) சுவா யீ லிங் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பேராக் மாநில கோலா செப்பெதாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர், தற்போதைய அஸ்ருல் ஷா முகமட்டுக்கு பதில், ஜனவரி 2020 முதல் ஐந்து ஆண்டுகள் அந்த பொறுப்புக்கு வருகிறார்.
"பல்வேறு தொழில் நிர்வாகத்தில் 17 ஆண்டுகள் விரிவான அனுபவமும் நிறுவனத்திற்கு பங்களிக்கக்கூடிய நிபுணத்துவம் மற்றும் நம்பகத்தன்மையும் கொண்ட புதிய தலைமை நிர்வாக அதிகாரியை சுற்றுலா சிலாங்கூர் இயக்குநர்கள் குழு, நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் வரவேற்கின்றனர்.
"இந்த நடவடிக்கை சுற்றுலாத் துறையை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக 2025ஆம் ஆண்டு சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் என்ற இலக்கை அடைவதில் ஆகும்," என்று தெரிவிக்கப்பட்டது.
சுற்றுலா சிலாங்கூரில் தொழில் வளர்ச்சி மற்றும் வணிக வலையமைப்பின் மேலாளராக சுவா தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
சுற்றுலா சிலாங்கூரில் சேருவதற்கு முன்பு, அவர் அரசாங்கத்தில் பல முக்கியப் பதவிகளை வகித்தார். அதாவது, வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரின் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றினார்.
"இந்த புதிய KPE நியமனம் அந்நிறுவனத்திற்கும் மாநில அரசாங்கத்திற்கு இடையேயான ஒத்துழைப்பை பலப்படுத்தும் என்று சுற்றுலா சிலாங்கூர் நம்பிக்கை கொண்டுள்ளது.


