ஷா ஆலம், ஜன. 10- லைசென்ஸ் இன்றி செயல்பட்ட காரணத்திற்காக
பெட்டாலிங் ஜெயாவின் பிஜேஎஸ் 2 மற்றும் சுங்கைவே பாசார் ஸ்ரீ
செத்தியாவிலுள்ள 18 வர்த்தக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டது.
அந்நிய நாட்டினரின் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளை
முறியடிக்கும் நோக்கில் நேற்று முன்தினம் காலை 11.00 மணி தொடங்கி
இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம்
தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
சிலாங்கூர் மாநில குடிநுழைவுத் துறையின் ஒத்துழைப்புடன்
மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் முறையான உரிமம் இன்றி
செயல்பட்ட 18 வர்த்தக வளாகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதோடு 20
அந்நிய நாட்டினரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர் என்று
அது தெரிவித்தது.
சட்டவிரோத வர்த்தக வளாகங்களுக்கு எதிரான சோதனை
நடவடிக்கையை மாநகர் மன்றம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும்
குற்றம் புரிந்தவர்களுடன் ஒருபோதும் இணக்கப் போக்கு
கடைபிடிக்கப்படாது என்றும் அந்த பதிவில் மாநகர் மன்றம் குறிப்பிட்டது.
கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைளை மாநகர் மன்றம்
தொடர்ந்து மேற்கொண்டு வரும். விதிகளையும் சட்ட திட்டங்களையும்
மீறிச் செயல்படும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் விட்டுக்
கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்றும் அது வலியுறுத்தியது.


