ஷா ஆலம், ஜன 9: முதலீட்டாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் பயனளிக்கும் உலகளாவிய வணிகங்கள் தேர்ந்தெடுக்கும் முக்கிய இடமாக சிலாங்கூர் தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.
அதிக மதிப்புள்ள முதலீடுகளை ஈர்ப்பதில் உறுதியுடன் இருப்பது, நல்ல ஊதியம் தரும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் விரிவான பொதுப் போக்குவரத்து இணைப்பை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக முதலீடு மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.
சிலாங்கூரில் போக்குவரத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுப் போக்குவரத்தை மக்களின் நலனுக்காக மிகவும் திறமையாகவும், பயனர்களுக்கு ஏற்றதாகவும் உருவாக்கப்படும் என இங் சீ ஹான் கூறினார்.
"சர்வதேச அளவில் சிலாங்கூர் நிலையான மற்றும் போட்டித்தன்மை கொண்ட மாநிலமாக இருக்க வேண்டும் என்ற பார்வையை நனவாக்க ஒன்றிணைந்து பணியாற்றிய அனைத்து தரப்பினருக்கும் மிக உயர்ந்த பாராட்டுக்கள்" என்று அவர் கூறினார்.
செப்டம்பர் வரை சிலாங்கூர் RM66.8 பில்லியன் முதலீட்டு வசூலை பதிவு செய்தது. இது கடந்த ஆண்டு நிர்ணயித்த RM55 பில்லியனைத் தாண்டி, மாநிலத்தை அதிக முதலீடு கொண்ட மாநிலமாக மாற்றியது என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் கூறினார்.
அவரது நிர்வாகம் தற்போது இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தில் (RS-2) கவனம் செலுத்துகிறது. இவ்வாண்டு அல்லது 2026 இல் லெம்பா கிள்ளான் ராயா உட்பட பல திட்டங்களுக்கு கூடுதல் கவனம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


