ஆயர் தாவார், ஜன 9: ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தீயில் சேதமடைந்ததைத் தொடர்ந்து அப்பள்ளியின் புதிய கட்டடத்தில் மாணவர்கள் கல்வியைத் தொடரவுள்ளனர்.
அக்கட்டடத்தின் பயன்பாட்டை உறுதி செய்யவதற்காக தகுதி சான்றிதழைப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டில் அந்தப் புதியக் கட்டடம் கட்டப்பட்டது. அதில் மூன்று வகுப்பறைகள், ஓர் ஆசிரியர் அறை, தலைமையாசிரியர் அறை மற்றும் நூல் நிலையமும் உள்ளது.
அக்கட்டடத்திற்கான தகுதி சான்றிதழ் கிடைத்ததும் மாணவர்கள் அங்கு கல்வியை மேற்கொள்வார்கள் என்று அப்பள்ளியைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் சிவநேசன் தெரிவித்தார்.
தற்காலிகமாக மாணவர்களுக்கு இயங்கலை வாயிலாக கற்றல் கற்பித்தல் நடவடிக்கை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
32 மாணவர்கள் மற்றும் 13 ஆசிரியர்கள் கொண்ட இப்பள்ளி தீயில் மோசமாக சேதமடைந்துள்ளதால் அக்கட்டடத்தைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பெர்னாமா


