ஷா ஆலம், ஜன 8 – கிழக்கு கரை ரயில் இணைப்புக்கு (ஈசிஆர்எல்) வழி வகுக்க ஏதுவாக சிலாட் கிள்ளான் முஸ்லிம் கல்லறைகளை மாற்றுவது ஃபத்வா ஷரியா மற்றும் கடுமையான இயக்க நடைமுறையின் (எஸ்ஓபி) கீழ் மேற்கொள்ளப் பட்டது.
சிலாங்கூர் மாநில முஃப்தி துறையால் வழங்கப்பட்ட ஃபத்வா மற்றும் சிலாங்கூர் இஸ்லாமிய மத கவுன்சில் (ஜெய்ஸ்) மூலம் ஏற்று கொள்ளப்பட்ட நடைமுறைகள் அடிப் படையில் இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை மக்களுக்கு நன்மை அளிப்பதை நோக்கமாகக் கொண்டது என்று இஸ்லாம் மற்றும் புதுமைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் பாஹ்மி ஙா கூறினார்.
“இமாம் சியாஃபியின் போதனைகளின் அடிப்படையில் (இஸ்லாமிய சட்ட சிந்தனைப் பள்ளி), முதல் நான்கு ஆண்டுகளுக்குள் கல்லறைகளை மாற்ற முடியாது. ஆனால், சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை அமைப்பது போன்ற மக்களின் நலன் திட்டங்களுக்காக இது அனுமதிக்கப் படுகிறது.
"மேலும், நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மோசமான வானிலையில் கல்லறைகளை மாற்ற மாட்டார்கள், குறிப்பாக மழை காலத்தில், காரணம் இது அவர்கள் பணியை கடினமாக்கும்," என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.
உடல்களை தோண்டி எடுப்பது மற்றும் இடமாற்றம் செய்வது குறித்து தங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்று உறவினர்களிடமிருந்து வரும் புகார்கள் தொடர்பாக, இறந்தவர்களையும் அவர்களின் குடும்பத்தினர் யாரையும் அவமதிக்காத வகையில் கடுமையான எஸ்ஓபியின் கீழ் பணிகள் நடந்ததாக ஃபஹ்மி வலியுறுத்தினார்.
“பொதுமக்கள் நலனுக்காக இடமாற்றம் செய்யப்பட்டது. இது ஷரியா விதிகளால் வழிநடத்தப்பட்டது. டெவலப்பர் அல்லது மேம்பாட்டின் கட்டுமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை," என்று அவர் கூறினார்.


