புத்ராஜெயா, ஜன. 8- லாயாங்-லாயாங் ஐலண்ட் ரிசோர்ட் சென். பெர்ஹாட் உரிமத்தை சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 6) முதல் ரத்து செய்தது.
அந்த உல்லாசத் தீவுக்கான எண் 2992 உரிமம் 1992ஆம் ஆண்டு சுற்றுலாத் தொழில் சட்டத்தின் [சட்டம் 482] 8வது பிரிவுக்கு ஏற்ப இந்த ரத்து நடவடிக்கை அமைவதாக அமைச்சின் சுற்றுலா ஆணையர் டத்தோ ரோஸ்லான் அப்துல் ரஹ்மாம் இன்று வெளியிட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில் கூறினார்.
மலேசியா மடாணி மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக உரிமம் பெற்ற சுற்றுலா நடத்துநர்களின் சட்ட விதி மீறுல்களை அமைச்சு கடுமையாகக் கருதுகிறது என்று என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, சபாவில் உள்ள ஒரு சுற்றுலாத் தீவு கடந்த 2020 முதல் ஸ்கூபா டைவிங் எனப்படும் முக்குளிப்பு தொகுப்புகளுக்கு முன்பதிவு செய்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட நபர்களிடம் பெறப்பட்ட வைப்புத்தொகையைத் திருப்பித் தரவில்லை என்று பல ஊடக இணைய தளங்கள் தெரிவித்திருந்தன.


