செம்பூர்ணா, ஜன. 8- இரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சபா மாநிலத்தின் துன் சகாரான் கடல் பூங்காவிலுள் பூலாவ் சிபுவான் துணை மின்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அந்த துணை மின் நிலையத்தை தற்காலிகமாக மூடும் நடவடிக்கை 12.30 மணிக்கு தொடங்குகிறது. இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறோம் என்று சபா பார்க்ஸ் தனது அதிகாரப்பூர்வ முகநூலில் பதிவேற்றிய அறிக்கையில் கூறியது.
சம்பந்தப்பட்ட பகுதி தற்போது பாதுகாப்பாக உள்ளதாகவும் சபா பார்க்ஸ் தெரிவித்துள்ளது.


