சிப்பாங், ஜன.7: நேற்று இரவு, டிசம்பர் 29 முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 17 வயது இளம்பெண் 11.15 மணியளவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
பத்து 9, செராசில் உள்ள ஓர் உணவகத்தில் இளம்பெண் நூருல் ஃபதேஹா நபிலா முகமட் சைலானி, கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர் காணமல் போன சமயம் தோழியின் வீட்டில் இருந்ததாகவும் சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நோரிஷம் பாஹ்மன் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
நூருல் ஃபதேஹா கண்டுபிடிக்கப்பட்ட தகவல் அவரது அத்தைக்கு தெரிவிக்கப்பட்டு அப்பெண் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக நோரிசாம் கூறினார்.
டிசம்பர் 31 அன்று நூருலின் அத்தை அளித்த புகாரைத் தொடர்ந்து அப்பெண் காவல்துறையினரால் தேடப்பட்டு வருவதாக ஜனவரி 4 ஆம் தேதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
காஜாங்கின் கம்போங் சுங்கை மெராப் லுவாரில் வசித்து வரும் அவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் புகார்தாரருடன் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– பெர்னாமா


