புத்ராஜெயா, ஜன 7 : 52வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME28) டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தோடு (1,407) ஒப்பிடும்போது 1,341ஆக குறைந்துள்ளது. அதே சமயம் ஓர் இறப்பும் ஏற்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் மொத்தம் 123,133 டிங்கி சம்பவங்கள் பதிவான நிலையில்
2024ஆம் ஆண்டு அதன் எண்ணிக்கை 122,423ஆக உள்ளது என்று சுகாதார இயக்குநர்
ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டில் மொத்தம் 100 இறப்புகள் பதிவாகியிருந்த நிலையில் அதன் எண்ணிக்கை கடந்தாண்டு 117ஆக அதிகரித்துள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மேலும், தொற்றுநோயியல் 52வது வாரத்தில் 22 ஹாட்ஸ்பாட் இடங்கள்
பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.
அதாவது சிலாங்கூரில் 12 இடங்களும், நெகிரி செம்பிலான் 5 இடங்களும், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூரில் 3 இடங்களும், பகாங் மற்றூம் பினாங்கில் தலா ஓர் இடமும் பதிவாகியுள்ளன.
– பெர்னாமா


