கோலாலம்பூர், ஜன. 7- இன்று காலை நேபாளத்தின் லோபுச்சே நகரிலிருந்து சுமார் 84 கிலோ மீட்டர் தொலைவில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் மலேசியர்கள் பாதிக்கப்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்று வெளியுறவு அமைச்சு இன்று உறுதிப்படுத்தியுது.
நேபாளத்தில் உள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்கும் அதேவேளையில் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து பூகம்பத்திற்குப் பிந்தைய சூழ்நிலையைக் கையாள்வதில் கவனமாக இருக்கும்படி விஸ்மா புத்ரா என்று அழைக்கப்படும் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியது.
நேபாளத்தில் உள்ள மலேசியர்கள் இ-கான்சுலர் தளம் மூலம் தங்களின் வருகையைப் பதிவு செய்து கொள்வதோடு சமீபத்திய தகவல் மற்றும் உதவிக்கு மலேசிய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும் விஸ்மா புத்ரா ஊக்குவிக்கிறது.
நேபாளத்தில் உள்ள மலேசியர்கள் காட்மாண்டுவின் லலித்பூர், பகுண்டோல்-3ல் உள்ள மலேசியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம். பொது விசாரணைகளுக்கு +977-1-5445680, +977-1-5445681, அல்லது +977-9801008000. என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் உதவியை நாட விரும்புவோர் mwkathmandu@kln.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாகவும் குடிநுழைவு விஷயங்களுக்கு kathmandu@imi.
நேபாள எல்லைக்கு அருகே திபெத்தில் இன்று ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பீகார், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.


