NATIONAL

லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு ஊழியருக்கு ஐந்து நாட்கள் தடுப்பு காவல்

7 ஜனவரி 2025, 7:26 AM
லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு ஊழியருக்கு ஐந்து நாட்கள் தடுப்பு காவல்

கோலா திரங்கானு, ஜன. 7: மாநிலத்தில் உள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழகத்தில் ஐந்து திட்டங்களுக்கான கட்டணக் கோரிக்கை ஆவணங்களை ஆதரித்துச் சான்றளிப்பதற்கு சுமார் RM 50,000 லஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் அரசு ஊழியர் ஒருவர் ஐந்து நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி) கோலா திரங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததை அடுத்து, 40 வயதுடைய நபரை ஜனவரி 10 ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு மூத்த உதவிப் பதிவாளர் யுஹானிஸ் முகமட் ரோஸ்லான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபர் மதியம் 1 மணியளவில் திரங்கானு எம்ஏசிசி அலுவலகத்தில் சாட்சி அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தனது மனைவியின் வங்கிக் கணக்கிற்கு அனுப்ப பட்ட பணப் பரிமாற்றம் மூலம் லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்தச் செயலைச் செய்ததாக நம்பப்படுகிறது.

"சந்தேக நபர் அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரது மனைவி எம்ஏசிசியின் பிணையிலிருந்து விடுவிக்கப்பட்டார்," என்று தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட முழு திட்டமும் சுமார் RM500,000 மதிப்புடையது ஆகும்.

இதற்கிடையில், திரங்கானு எம்ஏசிசி இயக்குநர் ஹஸ்ருல் ஷாஸ்ரீரின் அப்துட் யாசித்தை தொடர்பு கொண்டபோது இந்த கைது நடவடிக்கையை உறுதி செய்தார். மேலும், இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 17(ஏ) இன் கீழ் விசாரிக்கப்பட்டது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.