கோலாலம்பூர், ஜன. 7- ஊழியர் சேம நிதி வாரியத்தின் தலைவர்
(இ.பி.எஃப்.) டான்ஸ்ரீ முகமது ஸூக்கி அலி மற்றும் அவரின் பேராளர்
குழுவினர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை இன்று மரியாதை
நிமித்தம் சந்தித்தனர்.
அரசு சார்பு நிறுவனம் என்ற முறையில் மக்களின் ஓய்வுகாலத்தை
சிறப்பான முறையில் அமைப்பதில் இ.பி.எஃப். எவ்வாறு உதவ முடியும்
என்பது குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக அன்வார் தனது
பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சந்ததாரர்கள் ஓய்வு காலத்தில் வசதியான வாழ்க்கை வாழ்வதை உறுதி
செய்வதில் ஓய்வூதிய நிதி பாதுகாப்பு நிறுவனமான இ.பி.எஃப்.பின்
கடப்பாட்டை தாம் இச்சந்திப்பில் வலியுறுத்தியதாக அவர் சொன்னார்


