குவாந்தான், ஜன 7 - கேமரன் மலையில் உள்ள ஜாலான் பெசார் கம்போங் ராஜாவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சாலை நேற்று மதியம் அனைத்து வாகனங்களுக்கும் மீண்டும் திறக்கப்பட்டது.
"அப்பகுதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முடிந்துவிட்டன. அதிகாரிகள் தொடர்ந்து தளத்தை கண்காணித்து வருகின்றனர்," என்று கேமரன் மலை காவல்துறைத் தலைவர் அஸ்ரி ரம்லி கூறினார்
இச்சம்பவத்தால் எந்த உயிர் சேதமும் அல்லது சொத்து சேதமும் ஏற்படவில்லை என விளக்கினார்.
- பெர்னாமா


