NATIONAL

ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியில் தீ விபத்து

7 ஜனவரி 2025, 7:08 AM
ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியில் தீ விபத்து

ஆயர் தாவார், ஜன 7 - நேற்று , பேராக் மாநிலத்தில் உள்ள ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தீயில் சேதமடைந்தது.

13 ஆசிரியர்கள் மற்றும் 32 மாணவர்கள் கொண்டு இயங்கி வந்த இப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.

இச்சம்பவத்தின் போது மாணவர்கள் அனைவரையும் ஆசிரியர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றதாக பள்ளியின் வாரியக் குழுத் தலைவர் பி.மனஹரன் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து காலை மணி 11.39 அளவில் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர், சுமார் 25 நிமிடங்களில் தீயைக் கட்டுப் படுத்தியதாகவும் அவர் கூறினார்.

தீ விபத்துக்கான காரணத்தைத் தீயணைப்பு அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 1938 ஆம் முதல் இயங்கி வரும் இப்பள்ளியின் வளர்ச்சிக்காக பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை, பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற நிலையில் இத்தகையத் துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர்கள் கவலைத் தெரிவித்தனர்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.