குவாந்தான், ஜன. 6: கடந்த சனிக்கிழமை பகாங் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் தவறி ஆற்றில் விழுந்தார். அந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தது இன்று கண்டிபிடிக்கப்பட்டது.
இன்று காலை 7.45 மணியளவில் 14 வயதான அஸ்ரி ஃபஹ்மியின் உடல் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக் குழுவினரால் (எஸ்ஏஆர்) மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பகாங் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செயல்பாடுகள் மற்றும் மீட்புப் பிரிவின் உதவி இயக்குநர் சலாஹுடின் இசா கூறினார்.
உயிரிழந்தவர் வீழுந்ததாக தெரிவிக்கப்பட்ட இடத்திலிருந்து 900 மீட்டர் தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், மேல் நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- பெர்னாமா


