ஷா ஆலம், ஜன 6: உளவியல் ஆதரவு, ஆலோசனை மற்றும் வழிகாட்டு தேவைப்படும் மக்களுக்கு உதவ புதிய திட்டம் ஒன்றை சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (ஜெய்ஸ்) அறிமுகப்படுத்தியுள்ளது.அச்சேவை தொலைப்பேசி வழி உளவியல் ஆதரவு வழங்குவதாகும்.
வாழ்க்கையின் சவால்களை மிகவும் நேர்மறையான முறையில் எதிர்கொள்ள உதவும் வகையில், அனைத்து தரப்பு மக்களுக்கும் இச்சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.
"இந்த சேவையில் ஆலோசனை வழங்குதல் மற்றும் தனிப்பட்ட, குடும்பம், சமூக வாழ்க்கை பிரச்சனைகளைப் பற்றி கலந்துரையாடுவது ஆகியவை அடங்கும்
இந்த சேவை சமூக சேவை வழங்கலை மேம்படுத்த வழங்கப்படுகிறது என ஜெய்ஸ் தெரிவித்தது.
"மேலும், சமூகத்திற்கு நேரடி சேவைகளை வழங்குவதில் இத்திட்டம் அந்நிறுவனத்தின் பங்கை மேம்படுத்த உதவுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை, அலுவலக நேரங்களில் பொதுமக்கள் போஸ்டரில் உள்ள எண்னிற்கு அழைக்கலாம்.


