ஈப்போ, ஜன 6: இன்று லெங்கோங் அருகே கம்போங் பாரு ஆயர் காலா ஜாலான் லெங்கோங்-ககிரிக் என்ற இடத்தில் விபத்துக்குள்ளான கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒட்டுநர் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் தொடர்பாக காலை 8.30 மணிக்கு அழைப்பு வந்ததையடுத்து லெங்கோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்கள் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என பேராக் மலேசியா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.
தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் நிசான் சென்ட்ராவை ஓட்டி வந்த 28 வயது பெண் வாகனத்திலிருந்து இறங்கி உயிர் தப்பினார்.
"பாதிக்கப்பட்டவருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. அவர் ஆம்புலன்சில் கிளினிக்கிற்கு அனுப்பப்பட்டார். தீயை அணைக்கும் பணியை முடித்த பிறகு, காரின் பாதிப்பு 85 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது," என்று சபரோட்ஸி நோர் தெரிவித்தார்.மீட்பு நடவடிக்கை காலை 9.20 மணிக்கு நிறைவடைந்தது.
– பெர்னாமா


