இஸ்தான்புல், ஜன. 6 - கடும் குளிர் மற்றும் போதுமான உறைவிடம்
இல்லாத காரணத்தால் காஸாவில் குறைந்த து ஏழு குழந்தைகள்
மரணமடைந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான
நிறுவனம் கூறியது.
காஸாவில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் போதுமான தங்குமிட வசதி
இல்லாத காரணத்தால் புதிதாகப் பிறந்த சுமார் 7,700 குழந்தைகள்
உயிர்காப்புச் சேவை பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளன. இந்த பாதிப்பு
காரணமாக இதுவரை குறைந்தது ஏழு குழந்தைகள் மரணமடைந்துள்ளன
என்று அந்த நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்
தெரிவித்த து.
வட காஸாவில் செயல்பட்டு வந்த கடைசி மருத்துவமனையான கமால்
அத்வான் மருத்துவமனையும் இஸ்ரேலியப் படைகள் கடந்த வாரம்
மேற்கொண்டத் தாக்குதலில் பாதிக்கப்பட்டது குறித்து உலக சுகாதார
நிறுவனம் கண்டனம் தெரிவித்தது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் அந்த மருத்துவமனையின் அருகே
குறைந்தது ஐம்பது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐ.நா.வின்
அகதிகளுக்கான நிறுவனம் குறிப்பிட்டது.
கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஹூசாம் அபு
சாஃபியாவை விடுவிக்கும்படி உலக சுகாதார நிறுவனம் இஸ்ரேலை
வலியுறுத்தியது.
போர் நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரும் ஐக்கிய நாடுகள் சபையின்
பாதகாப்பு மன்றத் தீர்மானத்தையும் மீறி இஸ்ரேலிய இராணுவம்
காஸாவில் தொடர்ந்து இனப் படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது. கடந்த
2023ஆம் ஆண்டு தொடங்கிய இந்த தாக்குதலில் இதுவரை 45,800 பேர்
பலியாகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் சிறார்கள் மற்றும்
பெண்களாவர்.


