குவாந்தான், ஜன.6: இன்று கேமரன் மலையில் உள்ள ஜாலான் பெசார் கம்போங் ராஜாவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிகாலை 2 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை என்று கேமரன் மலை மாவட்ட காவல்துறை தலைவர் டிஎஸ்பி அஸ்ரி ரம்லி தெரிவித்தார்.
"இந்தச் சம்பவத்தின் விளைவாக இரு திசைகளிலும் போக்குவரத்து தடைபட்டது. தற்போது தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்
மேலும், கண்காணிப்பு மற்றும் உதவிப் பணியாளர்களை அனுப்புவதாக மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை (APM)சம்பவம் நடந்த இடத்தில் இருப்பதாக கேமரன் மலை மாவட்ட பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது.
ஜாலான் சுங்கை கோயன், லிப்பிஸ் மற்றும் ஜாலான் தாப்பாவை மாற்று வழியாக பயன்படுத்தி கேமரன் மலைக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது.
- பெர்னாமா


