ஈப்போ, ஜன. 6: ஜாலான் கோலா ரூய், கிரிக் என்ற இடத்தில் ரிங்கிட் 3,000 மதிப்புள்ள டெலிகாம் மலேசியாவுக்கு (டிஎம்) சொந்தமான கேபிள்களைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் மூன்று உள்ளூர் நபர்களை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
31 மற்றும் 36 வயதுடைய மூன்று சந்தேக நபர்களும் பெர்சியா காவல் நிலையத்தின் நிர்வாகப் பகுதியில் மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கிரிக் மாவட்ட காவல் துறைத் தலைவர் சுல்கிஃப்லி மஹ்மூட் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் மூவரும் வெள்ளை நிற நிசான் வேனெட் வேனில் பயணம் செய்தனர். வேனுக்குள் சோதனை செய்தபோது கேபிள்களை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சில உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றவியல் சட்டம் 379 வது பிரிவின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது என்றார் அவர்.


