ஜோகூர் பாரு, ஜன. 6: நேற்று மதியம் தாமான் ஸ்ரீ புத்ரி, ஸ்கூடாயில் உள்ள எட்டு உணவுக் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு நபரின் இடது கையில் தீக்காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக தனது தரப்புக்கு மாலை 4.44 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாக மூத்த செயல்பாட்டு உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் டிசி சைஃபுல்பஹாரி சஃபர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, ஸ்கூடாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த 17 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பாதிக்கப்பட்ட 37 வயதான வியாபாரி ஒரு சதவீத தீ காயங்களுக்கு ஆளானார். அவருக்கு அவசர மருத்துவ சேவை பணியாளர்களால் முதலுதவி அளிக்கப் பட்டது.
இரவு 7.05 மணிக்கு மீட்பு நடவடிக்கை முடிவடைந்தது.
– பெர்னாமா


