ஷா ஆலம், ஜன. 6 - இங்குள்ள புக்கிட் கெமுனிங் லோட் நிலக்
குடியிருப்புகளை தாங்கள் ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்று ஷா
ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் யோகேஸ்வரி சாமிநாதன்
திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
லோட் நிலக் குடியிருப்பு பகுதிகளைத் தரம் உயர்த்துவதற்கும் அங்கு
அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
பிரகாஷ் சாம்புநாதன் ஒத்துழைப்புடன் பல்வேறு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அரசியல் கட்சி பிரதிநிதி எனக் கூறிக் கொண்டு நபர் ஒருவர், லோட் நிலப்
பிரச்சினை தொடர்பில் டிக் டாக் காணொளி வெளியிட்டுள்ளது குறித்து
கருத்துரைத்த போது புக்கிட் கெமுனிங் பகுதிக்கு கவுலன்சிலரான அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒவ்வொரு லோட் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களை பிரதிநிதிகளாகக்
கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அக்குழுவினர் நகராண்மை கழக
உறுப்பினர்கள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரைச்
சந்தித்து தங்கள் பகுதியில் உள்ள குறைகளைத் தெரிவித்து வருகின்றனர். அவர்கள்
தெரிவிக்கும் குறைகள் அல்லது புகார்களின் அடிப்படை நாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஆனால், காணொளியை வெளியிட்ட சம்பந்தப்பட்ட நபர் இதுவரை என்னையோ
அல்லது அத்தொகுதி பிரநிதிகளையோ சந்திக்கவும் இல்லை. இவ்விவகராம் தொடர்ப்பாக
எவ்வித மனு அல்லது புகாரை நேரடியாகவோ அல்லது அழைப்பேசி வாயிலாக கூட
தெரிவிக்கவில்லை. நிலை இப்படி இருக்க திடீரென தோன்றி, சிலாங்கூர் மாநில அரசு
இன்னும் லோட் வீட்டு பகுதிகளை கம்போங் பகுதிகளாக அறிவிக்கவில்லை என்று
கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கின்றது என்றும் யோகேஸ்வரி குறிப்பிட்டார்.
ஒரு லோட் பகுதியை கம்போங் பகுதியாக அரசு பதிவேட்டில் அறிவிக்க வேண்டும்
என்றால் அதற்கு பல இலக்காக்கள் சம்பந்தந்தப்பட வேண்டும். அதற்கு முன்பு அப்பகுதியில் வசிக்கும் அனைவரும் ஒன்றினைந்து முறைப்படி மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ, நகராண்மை கழக உறுப்பினரிடமோ அல்லது அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடமோ வழங்கி இருக்க வேண்டும். அதன் பிறகே சம்பந்தப்பட்ட இலாகாவின் அதிகாரிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இப்படி எத்தகையை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் திடீர் என்று ஒரு டிக்டோக்
காணொளி வாயிலாக அரசியல் நடத்தும் அந்நபரின் செயல் குறித்தும்
யோகேஸ்வரி கேள்வியெழுப்பினார்.
மக்கள் பிரச்சனை என்பது வேறு அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பிரச்சனை
என்பது வேறு. அதுவும் இதுபோன்ற லோட் குடியிருப்பாளர்கள் விவகாரம் என்றால்
அப்பகுதியில் வசிக்கும் அனைவரும் முன்வந்தால் மட்டுமே அதற்கான தீர்வை நில
அலுவலகம் மூலமாக நாம் செயல்ப்படுத்த முடியும்.
அப்பகுதியில் வசிக்கும் தனி நபர் மூலமாகவோ அல்லது அப்பகுதிக்கு எள்ளளவும்
சம்பந்தம் இல்லாத நபர்கள் வெளியிடும் காணெளி வாயிலாகவே எதையும் சாதிக்க
முடியாது. உண்மையில் அப்பகுதியில் வசிப்பவர்கள் ஏதேனும் பிரச்சனையை எதிர் நோக்கி இருந்தால் அனைவரும் ஒன்றினைந்து புகார் மனுவை கொடுத்தாலோ அல்லது
அப்பகுதிக்கான குடியிருப்பாளர்கள் பிரநிதிகள் மூலமாக இவ்விவகாரத்தை கொண்டு
வந்தாலோ உடனடியாக தீர்வை நோக்கி செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அதை விடுத்து காணொளி மூலம் மலிவான அரசியல் செய்ய வேண்டாம். தனக்கு
அரசியல் மைல் கல் வேண்டும் என்பதற்காக இல்லாத ஒரு விவகாரத்தை பூதாகரமாக்கி
புகழ் பெற முயற்சிப்பதை சம்பந்தப்பட்ட நபர் நிறுத்திக் கொள்ள வேண்டும்
என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


