ஷா ஆலம், ஜன 5: பெஸ்தாரி ஜெயா, கோலா சிலாங்கூரில் உள்ள செம்பனை உற்பத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான எலி விஷம் பதப்படுத்தும் மற்றும் சேமிப்புக் கிடங்கு இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 80 சதவீதம் எரிந்து நாசமானது.
இச்சம்பவம் குறித்து இன்று காலை 4.14 மணிக்கு தனது தரப்புக்கு புகார் கிடைந்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) சிலாங்கூர் அஹ்மட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
17 x 4 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கிடங்கில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் 40 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஏழு தீயணைப்பு வாகனங்களுடன் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
காலை 5.39 மணிக்கு தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இச்சம்பவத்தில் யாரும் பாதிக்கப்பட்டவில்லை என்றும் அஹ்மட் முக்லிஸ் தெரிவித்தார்.
– பெர்னாமா


