கோலாலம்பூர், ஜன 5: கடந்த ஆண்டில் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட 63,652 மோசடி உள்ளடக்கங்களை மலேசியா தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி நீக்கியது.
அந்த எண்ணிக்கையில் 2023ஆம் ஆண்டில் நீக்கப்பட்ட 6,297 உள்ளடக்கங்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டுவதாக தொடர்பு துணை அமைச்சர், தியோ நீ சிங் தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்ட இணைய மோசடிகளில், deepfake போன்ற செயற்கை நுண்ணறிவு AI பயன்பாடு, பிரபலமானவர்கள் போன்ற ஆள்மாறாட்டம் செய்தல், காணொளிகள், வரைகளை மற்றும் பேச்சு ஆகியவை அடங்கும் என்றும் தியோ கூறினார்.
இன்று ஜோகூர் பெல்டா புக்கிட் பெர்மாய் சமூக மண்டபத்தில் நடைபெற்ற கம்போங் அங்காட் மடாணி திட்டத்தில் கலந்து கொண்டபோது, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
சமூக ஊடகங்களில் மோசடி தொடர்பான புள்ளிவிவரங்கள் மற்றும் நாட்டில் உள்ள சில பிரபலங்கள் சம்பந்தபட்ட deepfake குறித்து வினவப்பட்ட போது இதனை குறிப்பிட்டார்.


