சுங்கை பட்டாணி, ஜன. 5: பெடோங்கில் உள்ள கம்போங் கெடா தஞ்சோங் தாவாய் என்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 வீடுகள் பாதிக்கப்பட்டன. இதில் 30 வயதுடைய நபர் ஒருவரின் கால்கள் மற்றும் கைகள் தீயால் காயமுற்றன.
இச்சம்பவம் தொடர்பாக காலை 7.28 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) மொத்தம் 25 அதிகாரிகள் 7.53 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கெடாவில் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) உதவி இயக்குனரான மூத்த தீயணைப்பு கண்காணிப்பாளர் I, அசார் முகமட் கூறினார்.
தீக்காயமடைந்தவரை சுகாதார அமைச்சின் பணியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அவர் கூறினார்.
"காலை 8.12 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தஞ்சோங் தாவாயில் தீ கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) செயல்படுத்தப்பட்டது," என்று அவர் கூறினார்.
– பெர்னாமா


