தோக்கியோ, ஜன 5: உலகிலேயே மிகவும் வயதான நபராக கருதப்படும் ஜப்பானிய பெண் ஒருவர் தனது 116வது வயதில் மரணமடைந்தார் என்று ஜெர்மன் செய்தி நிறுவனம் (டிபிஏ) சனிக்கிழமையன்று ஜப்பானிய பொதுத் தொலைக்காட்சியான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது.
தோமிகோ இடூகா கடந்த டிசம்பர் 29 அன்று முதியோர் இல்லத்தில் முதுமை காரணமாக மரணமடைந்துள்ளார்.
அவர் மே 23, 1908 இல் ஒசாகாவில் மூத்தப் பிள்ளையாகப் பிறந்தார். உலகிலேயே மிகவும் வயதான நபராக கின்னஸ் புத்தகத்தில் இடூகா பட்டியலிடப்பட்டுள்ளார்.
ஜப்பானின் மக்கள் தொகையில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, 100 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 95,100 நபர்களை ஜப்பான் பதிவு செய்துள்ளது. இந்த நாட்டில் குறைந்தபட்சம் 100 வயதைக் கடந்த குடிமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து 54 வது ஆண்டாக அதிகரித்துள்ளது.


