குவாந்தான், ஜன. 5: நேற்று மதியம் பகாங் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் தவறி ஆற்றில் விழுந்தார். அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மாலை 5.07 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், ஜெரண்டுட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (பிபிபி) எட்டு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் பகாங் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்)செய்தித் தொடர்பாளர் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட அஸ்ரி ஃபஹ்மி (14) தனது நண்பர்கள் இருவருடன், படகில் இருந்தவாறு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,பகாங் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
"1.5 கிலோமீட்டர் தொலைவில் படகைப் பயன்படுத்தி நீரின் மேற்பரப்பில் மீட்புத் தேடலை தீயணைப்பு படை மேற்கொண்டது.
காவல்துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் கிராம மக்களின் உதவியுடன் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.
– பெர்னாமா


