ஷா ஆலம், ஜன 5: சிலாங்கூர் எஃப்சி அணிக்கு 500,000 ரிங்கிட் மதிப்பிலான பங்களிப்பை சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) வழங்கியது.
இந்த நன்கொடையை பிகேஎன்எஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ மஹ்மூட் அப்பாஸ், சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷாவிடம் வழங்கினார்.
சமீபத்தில் இஸ்தானா மெஸ்டிகா,செக்ஷன் 7, ஷா ஆலமில் நடந்த விழாவில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்தது.
இதில் பிகேஎன்எஸ் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி டாக்டர் அஸ்லினா ஜாபர் மற்றும் பிகேஎன்எஸ் மூத்த பொது மேலாளர் மஹ்பிசுல் ருசிடின் அப்துல் ரஷிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில விளையாட்டுகளின் வளர்ச்சியை ஆதரிப்பதில் பிகேஎன்எஸ் முழு ஈடுபாட்டுடன் உள்ளது. மேலும் சிலாங்கூர் எஃப்சி அணி எதிர்காலத்தில் தொடர்ந்து சிறந்து விளங்கும் என்று அந்நிறுவனம் நம்புகிறது.


