கோலாலம்பூர், ஜன 5: சிலர் தங்கள் சொந்த அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு ஆலயங்களை குறிப்பாக இந்து ஆலயங்களை தங்கள அரசியல் விளையாட்டுக்கு மைதானமாக்கி வருவது கண்டிக்க தக்கது.
மனிதர்களுக்கு மரியாதை கொடுக்காதவர்கள் இப்பொழுது தெய்வங்களையும் பகிரங்கமாக அவமதிக்க துணிந்திருப்பதை காட்டுகிறது்.
பல இன சமயங்கள் வாழும் இந்நாட்டில் நாம் மிக கவனமாக சமய வழிபாடுகளை செய்ய வேண்டும். நம் சமயத்திற்கு பாங்கான எதையும் செய்யக்கூடாது.
பலி பாவங்களுக்கு ஆலயங்களை மையமாக்க கூடாது.
சட்டபடி தண்டிக்கப்பட வேண்டிய செயல்களை திசைத்திருப்ப
சமய வழிபாட்டு தளங்களை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நாம் நமது சமய , வழிப்பாட்டு தளங்களை உதாசீனம் செய்ய கூடாது.
நாடறிந்த ஒரு குற்றவாளிக்கு , நீதிமன்றமே குற்றவாளி என தீர்பளித்து விட்ட பின், அக்குற்றவாளிக்காக கோவிலில் கூட்டம் போட்டு பிராத்தனை என்ற பெயரில் அரசியல் செய்வது இந்துகளின் வழிபாடுகளை கேவலப்படுத்துவதற்கு ஒப்பாகும்.
இந்து குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் சிறையில் வாடும் பொழுது, மரண தண்டனையை எதிர்நோக்கி இனனல் படும் பொழுது அவர்கள் மீது ஏற்படாத கருணை, நாட்டு மக்களை கடனாளியாக்கி விட்ட நஜிப் மீது சிலருக்கு ஏற்பட்டுள்ள பரிவு. பரிகாசத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது என்கிறார் முன்னாள் நீர், இயற்கைக் வள அமைச்சரான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.


