பினாங்கு, ஜன 4: காலை 11. 30 மணிக்கு தனது உரையை துவக்கிய மாநில முதல்வர் சௌ கொன் யாவ் வருகைத் தந்திருந்த அனைவரையும் வரவேற்று வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார் .
அவர் மீண்டும் ஒரு முறை பினாங்கில் கோதோ என்னும் உலக தமிழ்வம்சாவளி மாநாட்டை நடத்த ஆர்வமாக உள்ளதாக அந்த உரையில் கூறினார். தமிழர்களின் அர்பணிப்பையும் அவர்களிடமுள்ள திறமைகளையும் தனது உரையில் பாராட்டினார்.
இந்த மாநாடு தமிழ் நாட்டுக்கும் பினாங்கு மாநிலத்திற்கும் உள்ள நெருக்கத்தை காட்டுவதுடன், இதுப்போன்ற தொடர்ச்சியான முயற்சிகள் வழி இரு தரப்பும் தொடர்ந்து நெருங்கி வர வழி வகுக்கிறது. மேலும், இது நாம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வழி வகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, இந்த மாநாட்டினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்து, சிறப்பு மாநாட்டு மலரையும் வெளியிட்டார்.


