NATIONAL

பினாங்கு சுற்றுலாத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் தமிழர்களின் அர்ப்பணிப்பை பாராட்டினார்

4 ஜனவரி 2025, 8:23 AM
பினாங்கு சுற்றுலாத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் தமிழர்களின் அர்ப்பணிப்பை பாராட்டினார்

பினாங்கு, ஜன 4: இந்நிகழ்வின் ஆரம்பமாக தேசிய கீதம், மாநில கீதம் மற்றும் தமிழ் வாழ்த்து பாடல்கள் இசைகப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அடுத்து வருகை தந்திருந்த பிரமுகர்கள் கௌரவிக்கப் பட்டனர்.

பினாங்கு சுற்றுலாத்துறை மற்றும் , தொழில் மேம்பாட்டு த்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு வோங் கொன் யாவ் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அவர் தனது உரையில் பினாங்கு தீவு உருவாக்கத்திலும் , தற்போது அடைந்துள்ள மேம்பாடுகளிலும் தொடர்ந்து பங்காற்றி வரும் தமிழ் சமுதாயத்திற்கு நன்றி யையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். எதிர்வரும் ஆண்டுகளில் தொடர்ந்து தமிழர்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக கூறினார்.

அதனை அடுத்து, பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினரும், மாநாட்டை பினாங்கில் ஏற்பாடு செய்வதில் முக்கியபங்காற்றியவருமான டத்தோ ஸ்ரீ சுந்தர்ராஜூ உரை நிகழ்த்தினார். அதில் ஒற்றுமை, உழைப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

தொடர்ந்து, பினாங்கு துணை முதல்வர் மாண்புமிகு ஜாக்டிப் சிங் டியோ தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கும் தலைவர்களை வரவேற்று பேசினார்.

அவர் சமிபத்தில் இந்திய சென்று வந்ததகவும், அங்கு ஏற்பட்டுள்ள கணினி துறை மேம்பாடுகளையும் வளர்ச்சியையும் பாராட்டி பேசினார். இரு நாடுகளுக்கு இடையே வாணிக உறவுகளை மேம்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.