பினாங்கு, ஜன 4: இன்று காலை10 மணிக்கு 11 வது உலக தமிழ் வம்சாவளி மாநாட்டை பினாங்கு முதல் அமைச்சர் சௌ கொன் யாவ் , பினாங்கு டேவான் ஸ்ரீ பினாங்கு அரங்கில் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.
இதில் பினாங்கு துணை முதல்வர் மாண்புமிகு ஜக்சிட் சிங், வீட்டு வசதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு சுந்தர்ராஜூ சோமு ,
தமிழ்நாட்டின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு .மு. பெ. சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலைத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.பிகே. சேகர்பாபு, பால் வளத்துறை மற்றும் கிராமத்தொழில் வாரிய அமைப்பு மாண்புமிகு திரு ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் , தமிழ் நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் கோ.வி செழியன், மொரிஷீயஸ் இளைஞர்,விளையாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு்.தர்மராஜன் நாகலிங்கம் , இலங்கை மீன் பிடி,நீரியல் மற்றும் பெருங்கடல் வளங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ராமலிங்கம் சந்திரசேகர் , நியூ பிரிட்டன், பப்புவா நியூ கினியா கவர்னர் மாண்புமிகு சசீந்திரன் முத்துவேல் , உலக தமிழ் வர்த்தக சங்க தலைவர் திரு. ஜெ.செல்வகுமார், உலக தமிழ் வம்சாவளி அமைப்பு, பினாங்கு மேயர் டத்தோ ராஜேந்திரன் அந்தோணி , தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனர் டத்தோ கு. சகாதேவன் மற்றும் பல உயர்மட்ட வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பேராளர்கள் கலந்துக் கொள்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு நடக்க திட்டமிட்டுள்ள இந்நிகழ்வில், நாளை பெண் தொழில்முனைவோருக்கான குறு, சிறு, நடுத்தர தொழில் ஆய்வு மற்றும் சந்திப்பும் முக்கியமாக திட்டமிடப்பட்டுள்ளது.


