கோலாலம்பூர், ஜன 3 - டிசம்பர் 29 அன்று காலமான அமெரிக்க முன்னாள் அதிபர் ஜேம்ஸ் இ.கார்ட்டரருக்கு மலேசிய அரசாங்கமும் மக்களும் தங்கள் இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.
1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் 39வது அதிபராகப் பணியாற்றிய கார்ட்டர், மனிதாபிமான முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றி உலகில் அழியாத முத்திரையை பதித்த ஒரு புகழ்பெற்ற அரசியல்வாதி ஆவார் என்று வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா) தெரிவித்துள்ளது.
"இந்த கடினமான நேரத்தில் அவரின் குடும்பத்தினர் வலிமையை பெறுவார்கள் என்று மலேசியா நம்புகிறது" என முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்ட படங்களையும் விஸ்மா புத்ரா பகிர்ந்துள்ளது.
2002 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற கார்ட்டர், ப்ளைன்ஸ்,ஜார்ஜியாவில் உள்ள அவரது வீட்டில் 100 வயதில் காலமானார்.
- பெர்னாமா


