கோத்தா பாரு, ஜன.3: மக்கள் நலன் காக்கும் ஆற்றலைத் திரட்டி கெஅடிலன் உறுப்பினர்கள் உடனடியாகத் தங்கள் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அதன் துணைத் தலைவர் வலியுறுத்தினார்.
அனைத்து உறுப்பினர்களும், குறிப்பாக தலைமை, பொதுத் தேர்தலுக்காக (பிஆர்யு) காத்திருக்காமல், முறையான பணிகளுடன் தயாராக இருக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
"இன்னும் வேகமாக செயல்பட வேண்டும், மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். எல்லாவற்றிலும் தயாராக இருக்க வேண்டும். அடுத்த பொதுத் தேர்தல் 2026 ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெறலாம். நாம் தயாராக இருக்க வேண்டும். பொதுத் தேர்தலுக்கான 'மூட்' என்பதை இப்போதிலிருந்தே அமைப்பது நல்லது.
"முக்கியம் என்னவென்றால், நீதி வெல்ல வேண்டும். எல்லா பகுதிகளுக்கும் செல்லுங்கள், தேர்தலுக்கு காத்திருக்க வேண்டாம். இப்போது தொடங்குவதில் எந்தத் தவறும் இல்லை. முன்னதாக தொடங்குவது நல்லது," என்று அவர் கூறினார்.
கோத்தா பாருவில் உள்ள பெர்டானா ஹோட்டலில் நேற்று கிளந்தான் நீதி மைய தலைமைத்துவ கவுன்சிலுடனான நட்புறவு கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.


