NATIONAL

ஜோகூரில் வெள்ளம் நிலைமை முழுமையாக சீரடைந்துள்ளது

3 ஜனவரி 2025, 8:54 AM
ஜோகூரில் வெள்ளம் நிலைமை முழுமையாக சீரடைந்துள்ளது

ஜோகூர் பாரு, ஜன 3: ஜோகூரில் வெள்ளம் நிலைமை முழுமையாக சீரடைந்துள்ள நிலையில் கோத்தா திங்கியில் உள்ள இறுதி தற்காலிக தங்கும் மையம் (பாலாய் ராயா கம்போங் பெர்பாட்) இன்று காலை 11 மணிக்கு மூடப்பட்டது.

கடந்த செவ்வாய்கிழமை திறக்கப்பட்ட அந்த தற்காலிக தங்கும் மையத்தில் தங்கிருந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் இன்று தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர் என மாநிலப் பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.

“வெள்ளம் வடிந்து, குடியிருப்புப் பகுதியில் நிலைமை பாதுகாப்பாக இருப்பதாகக் கண்டறியப்பட்ட பின்னர் அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், இன்று காலை 10 மாவட்டங்களில் வெயிலுடன் கூடிய வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை பெய்த தொடர் கனமழையால் கோத்தா திங்கி மாவட்டம் மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.