இஸ்தான்புல், டிச. டிச. 3 - ஆசாட் நிர்வாகம் வீழ்ந்தது முதல் 115,000க்கும்
மேற்பட்ட சிரியா நாட்டினர் தாயகம் திரும்பியதாக ஐக்கிய நாடுகள்
சபையின் அகதிகளுக்கான நிறுவனம் (யு.என்.சி.எச்.ஆர்.) கூறியது.
கடந்த டிசம்பர் 8ஆம் தேதி முதல் அவர்கள் துருக்கி, ஜோர்டான்,
லெபனான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தாயகம் திரும்பியதாக அந்த
அகதிகள் அமைப்பு அறிக்கை ஒன்றில் கூறியதாக அனாடோலு ஏஜென்சி
செய்தி வெளியிட்டுள்ளது.
உபசரணை நாடுகளால் வெளியிடப்பட்ட பொது அறிக்கைகள்,
சிரியாவிலுள்ள குடிநுழைவுச் சேவையுடனான கலந்துரையாடல் மற்றும்
எல்லையில் ஏஜென்சிகள் மேற்கொண்ட கண்காணிப்பு ஆகியவற்றின்
அடிப்படையில் இந்த தரவுகள் கிடைத்ததாக அது குறிப்பிட்டது.
சிரியாவை 25 ஆண்டுகளாக தனது இரும்புப் பிடியில் வைத்திருந்த பஷார்
ஆசாட், கடந்த டிசம்பர் 8ஆம் தேதி எதிர்ப்பு இராணுவம் தலைநகர்
டமாஸ்காசை கைப்பற்றியதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு தப்பியோடினார்.
இதன் வழி கடந்த 1963ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த பாட் கட்சியின்
ஆட்சி அந்நாட்டில் முடிவுக்கு வந்தது.


