NATIONAL

எஹ்சான் ரஹ்மா விற்பனையின் வெற்றிக்கு RM12 மில்லியன் மானிய ஒதுக்கீடு

3 ஜனவரி 2025, 3:48 AM
எஹ்சான் ரஹ்மா விற்பனையின் வெற்றிக்கு RM12 மில்லியன் மானிய ஒதுக்கீடு

அம்பாங் ஜெயா, ஜன 3: கடந்த ஆண்டு எஹ்சான் ரஹ்மா விற்பனையை (JER) வெற்றிகரமாக நடத்த மாநில அரசு மொத்தம் RM12 மில்லியன் மானிய ஒதுக்கீடு செய்தது.

சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகத்தால் (PKPS) செயல்படுத்தப்படும் இந்தத் திட்டமானது 1,200 விற்பனை நிலையங்கள் மூலம் 4.5 மில்லியன் மக்கள் பயனடந்ததாக வேளான் ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

"அதுமட்டுமில்லாமல் அவசரகால சூழ்நிலைகளை சமாளிக்க உணவு விநியோக மையமாக செயல்படுவதோடு, பொருளாதார சவால்களை எதிர்கொள்ள எஹ்சான் மார்ட் சூப்பர் மார்க்கெட் மக்களுக்கு உதவுகிறது.

"இது உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாகும். மேலும், சிலாங்கூர் உணவுக் கிடங்கு உணவு விநியோகச் சங்கிலியைத் தொடங்குவதற்கான சேமிப்பு மையமாக செயல்படுகிறது" என்று இஷாம் ஹாஷிம் கூறினார்.

RM15 மில்லியன் மானியத்துடன் இந்த ஆண்டு மலிவு விற்பனை நடத்தப்படும் இடங்கள் 1,700 ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் செய்தியாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் நடத்தப்பட்ட மெகா விற்பனையானது இந்த ஆண்டு இரண்டிலிருந்து ஆறு மடங்காக அதிகரிக்கப்படும்.

"2025 ஆம் ஆண்டு முழுவதும்,மலிவு விற்பனை திட்டம், எஹ்சான் மார்ட் மற்றும் உணவுக் கிடங்களுக்கு RM30 மில்லியனை மாநில அரசு ஒதுக்கியுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.