தெஹ்ரான், ஜன. 3 - கடந்தாண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி தொடங்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானில் உள்ள வீடுகளைத் தாக்கி தீ வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி இஸ்லாமியக் குடியரசு செய்தி நிறுவனம் (ஐ.ஆர்.என்.ஏ.) தெரிவித்தது.
தெற்கு லெபனானின் பின்ட் ஜெபெல் மாவட்டத்திலுள்ள அய்தாருன் பகுதியில் பல வீடுகளுக்கு இஸ்ரேலியப் படைகள் தீ வைத்ததாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் (என்.என்.ஏ.) கடந்த புதன்கிழமை கூறியது.
2025 ஆம் ஆண்டின் முதல் நாளில் பெய்ரூட்டின் புறநகர் பகுதியான டாஹி மற்றும் லெபனானின் ஐந்தாவது பெரிய நகரமான டைரின் வான்வெளியில் இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் இரண்டாவது முறையாக போர்நிறுத்த உத்தரவை மீறி பறப்பதை தாங்கள் கண்டதாகவும் அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பலமுறை மீறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


