கோலாலம்பூர், ஜன 2: போலி உரிமைகோரல்களை உள்ளடக்கிய MACC சட்டம் 2009 பிரிவு 18ன் கீழ் உள்ள வழக்கு தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) புலனாய்வுப் பிரிவு ஏழு நபர்களை தேடி வருகிறது.
அந்த ஏழு பேர் லியாங் ஹ்வா கியோங் (68),காங் சியான் சீ (57), லியோங் தியென் போ (63), ஓங் சீ ஹியோங் (60), லிம் ஹூன் வூன் (48); டெங் வான் பெங் (50)மற்றும் தெங் வான் லூங் (51) ஆகியோர் ஆவர் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தது
சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களின் கடைசி முகவரிகளும் கோலாலம்பூர், ரவாங் மற்றும் சுங்கை பூலோவைச் சுற்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
"அவர்களை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் புலனாய்வு அதிகாரி கைருல் ஆரிஃபின் கசாலியை 012-3235996 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் அல்லது khairulariffin@sprm.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவலை அனுப்பலாம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெர்னாமா


