அம்பாங் ஜெயா, ஜன 2: இன்று பண்டான் உத்தாமவில் மலிவு விலையில் அடிப்படைப் பொருட்களை வழங்கும் ஏஹ்சான் மார்ட் புதிய கடை திறக்கப்பட்டுள்ளது.
சுங்கை துவா மற்றும் பண்டான் இண்டா தொகுதிகளுக்கு பிறகு இந்த ஆண்டு மேலும் 10 கிளைகளை உருவாக்க மாநில அரசு இலக்கு வைத்துள்ளதாக வேளாண் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் கூறினார்.
"மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஏஹ்சான் மார்ட் விற்பனை திட்டத்தில் பல்வேறு மேம்பாடுகள் செயல்படுத்தப்படுள்ளன. மூலோபாய இடங்கள் கண்டறியப்பட்டு, ஒவ்வொரு கிளைக்கும் சுமார் RM400,000 கட்டுமானச் செலவு ஒதுக்கப்படுள்ளது.
குடியிருப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஏஹ்சான் மார்ட் மற்றும் மலிவு விற்பனையில் ஆறு பொருட்கள் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.


