கோலாலம்பூர், ஜன. 2 - இன்று காலை 8.00 மணி நிலவரப்படி கிளந்தான், பேராக் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் வெள்ள நிலைமையில் மாறவில்லை.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அந்த மூன்று மாநிலங்களில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 414 பேராக உள்ளது.
பேராக்கில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 59 குடும்பங்களைச் சேர்ந்த 307 பேர் முவாலிம் மாவட்டத்தில் உள்ள கம்போங் அஸ்லி சிங்குங் சமூக மண்டபத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
பேராக் ஆற்றின் பாகான் டத்தோ பகுதியில் நீர்மட்டம் 3.11 மீட்டர் உயர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக பேராக் மாநில பாசனம் மற்றும் வடிகால் துறை தெரிவித்துள்ளது.
கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேராக உள்ளது. அவர்கள் ரந்தாவ் பாஞ்சாங், குவால் தோக் டே தேசியப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜோகூர் மாநிலத்திலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. 17 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 69 பேர் கோத்தா திங்கி மாவட்டத்திலுள்ள இரு துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளதாக
மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டார்.


