சான் பிரான்சிகோ, ஜன. 1- சீயேட்டல் நகரிலிருந்து ஹோனலுலு நோக்கிச் பயணமான ஹவாய்யன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஏ330 விமானம் விமானி அறையில் எழுந்த புகை காரணமாக பாதி வழியில் பயணத்தை ரத்து செய்து மீண்டும் சீயேட்டல் விமான நிலையத்திற்கே திரும்பியது.
அந்த விமானம் கடந்த திங்கள்கிழமை உள்நாட்டு நேரப்படி பிற்பகல் 1.00 மணியளவில் மீண்டும் சீட்டல்-தாமோகா விமான நிலையம் வந்தடைந்ததாக சீயேட்டல் டைம்ஸ் பத்திரிகையை மேற்கோள் காட்டி ஷின்வா ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கான காரணம் தற்போது ஆராயப்பட்டு வருவதாக கூட்டரசு வான் போக்குவரத்து நிர்வாகம் தனது அகப்பக்கத்தில் தெரிவித்தது.
அந்த விமானத்தில் புகை காணப்படவில்லை என்றும் மாறாக ஆவி போன்ற தோற்றம் தென்பட்டதாக ஹவாய்யன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கூறியது.
இதனைத் தொடர்ந்து அவசர நிலையை அறிவித்த விமானி, தரையிங்குவதற்கு முன்னுரிமை கோரி விமானத் சியேட்டல் விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கினார் என்று அது குறிப்பிட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக் குழுவினரும் தீயணைப்பு வீரர்களும் விமான நிலையத்தில் தயாராக இருந்தனர். 273 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் பயணம் செய்த அந்த ஏர்பஸ் ஏ330 ரக விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
மறுநாள் செவ்வாய்க்கிழமை புதிய விமானம் மூலம் பயணிகள் ஹோனலுலு பயணமானதாக விமான நிலையப் பேச்சாளரான மெரிசா வில்லேஜேஸ் கூறினார்.


