கோலாலம்பூர், ஜன.1 - மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா தம்பதியர் நாட்டு மக்களுக்கு தங்களின் அன்பான புத்தாண்டுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
சுல்தான் இப்ராஹிம் அவர்களின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
புத்தாண்டை வரவேற்கும் இத்தருணத்தில் அனைத்து மலேசியர்களின் நல்வாழ்வுக்காக தாங்கள் பிரார்த்தனை செய்வதாக மாமன்னர் தம்பதியர் கூறினர்.
தேசத்தின் தொடர்ச்சியான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்காகவும் அரச தம்பதியர் பிரார்த்தனை செய்தனர்.
கருணையும் அன்பும் கொண்ட இறைவா!, மக்களையும் நாட்டையும் எப்போதும் பாதுகாக்கும்படி நாங்கள் உம்மை மன்றாடுகிறோம். மக்களும் தேசமும் செழிப்புடனும் எந்தவொரு பேரழிவிலிருந்தும் பாதுகாக்கப்படட்டும் என்று அவர்கள் கூறினார்.


