ஷா ஆலம், ஜனவரி 1 - கூட்டரசு அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளும் பிரபலமாகவோ அல்லது உடனடியாக சாதகமான முடிவுகளைத் தருவதோ இல்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது புத்தாண்டு உரையில் கூறினார்.
இருப்பினும் மலேசியர்களுக்கு பயனளிக்கும் கொள்கைகளை அமல்படுத்துவதில் தனது நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார்.
தனது புத்தாண்டு உரையில், நீதி மற்றும் சமத்துவத்தில் வேரூன்றிய மடாணி பொருளாதார கட்டமைப்பால் வழி நடத்தப்படும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அவர் மறுஉறுதிப்படுத்தினார்.
இந்த கட்டமைப்பு, மலேசிய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் நீதியை உறுதி செய்யும் வகையில், இரக்கமுள்ள மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட பொருளாதார அமைப்பை நிறுவுவதற்கான தலைமை மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாக செயல்படுகிறது.
"அனைத்து முடிவுகளும் கொள்கைகளும் உடனடியாக பிரபலமடையவோ அல்லது விரைவான முடிவுகளை வழங்க இல்லை என்றாலும், ஒவ்வொரு முயற்சியும் தெளிவான அரசியல் விருப்பம், உண்மையான நோக்கங்கள் மற்றும் முழுமையான மதிப்பீடு களுடன் மேற்கொள்ளப் படுகின்றன, அவை பெரும்பான்மையான மக்களுக்கு பயனளிப்பதை உறுதிப்படுத்துகின்றன" என்று அவர் கூறினார்.
ஒற்றுமை அரசாங்கம் புத்ரா ஜெயாவில் மூன்றாவது ஆண்டுக்குள் நுழையும் இவ்வேளையில் , மலேசியாவின் கடன்கள் RM 1.5 டிரில்லியனை நெருங்கியுள்ளதால், மானிய உதவி சீர்திருத்தம் மற்றும் செலவுக் குறைப்பு உள்ளிட்ட பல முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் இயற்றப்பட்டுள்ளன.
பணக்காரர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு பெரிய அளவில் நீண்ட கால அடிப்படையில் உதவும், அதே வேளையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு தீங்கிழைத்து வந்த, பொருளாதார வீண் விரையத்தின் வழி செயல் திறனற்ற தன்மைகளை நிவர்த்தி செய்வதற்கான இலக்காக டீசல் மானிய சீர்திருத்தத்தை அரசாங்கம் செயல்படுத்தியதும் இந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும் என்று அன்வார் கூறினார்.
"இந்த திறமையின்மைக்கு முடிவு கட்டுவதன் மூலம், உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கு வளங்களை திருப்பி விடுகிறோம்" என்று அவர் கூறினார், இந்த ஆண்டு முதல் கிட்டத்தட்ட 200,000 வெளிநாட்டு பதிவை கொண்ட வாகனங்களுக்கு மானிய முடக்கத்தை சுட்டிக்காட்டினார்.
அதனை ரஹ்மா ரொக்க உதவி மற்றும் ரஹ்மா அடிப்படை உதவித் திட்டங்களின் கீழ் நேரடி ரொக்க உதவியில் சாதனையான அதிகரிப்பையும் அன்வார் எடுத்துரைத்தார், அதனால் அடுத்த ஆண்டு கூடுதலாக RM3 பில்லியன் ஒதுக்கப் பட்டு, மொத்த ஒதுக்கீடு RM13 பில்லியனாக உயர்த்துவதை சுட்டிக்காட்டினார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை நிர்வகிப்பதற்கான முயற்சிகள் பாயோங் ரஹ்மா திட்டம் மற்றும் நியாயமற்ற விலை உயர்வுகளை கட்டுப்படுத்த கடுமையான அமலாக்கம் போன்ற முன்முயற்சிகளை வலுப்படுத்தவுள்ளதாக அன்வார் கூறினார்.
"இந்த நடவடிக்கைகள் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும், தற்போதைய பொருளாதார சவால்களில் எவரும் சுரண்ட படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டுகின்றன".
சமீபத்திய வெள்ளப் பேரழிவுகள் குறித்தும் , பாதிக்கப்பட்ட சமூகங்களில் இன்னல் குறித்து கவலை தெரிவித்த பிரதமர், மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் உதவி திட்டங்களை மேம்படுத்த உறுதியளித்தார்.
வெள்ள ஆபத்து நிறைந்த இடங்களில் வெள்ள தணிப்புத் திட்டங்களுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார், நிதிச் சுமையை ஒப்புக் கொண்ட அவர், உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
முன்னோக்கிப் பார்க்கும் போது, "உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை" என்ற கருப்பொருளின் கீழ் 2025 ஆம் ஆண்டில் ஆசியான் தலைவராக மலேசியா ஆற்ற வேண்டிய பெரும் பங்கை அன்வார் எடுத்துரைத்தார்.
"உள்நாட்டில் நிர்வாகத்தை வலுப்படுத்தும் அதே வேளையில் சிறப்புடன் வழிநடத்த இது நமக்கு கிடைத்த நல் வாய்ப்பு,. ஊழலை எதிர்த்துப் போராடுவது மூலமும், தேசிய ஒற்றுமையை வளர்ப்பதன் மூலமும் மட்டுமே பிராந்திய மற்றும் உலக அளவில் நமது தலைமைக்கு மதிப்பையும் மரியாதையையும் பெற முடியும் "என்று அவர் கூறினார்.


