பட்டர்வொர்த், டிச. 31: கடந்த ஆண்டு 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புமிக்க காப்புறுதியை போலியான முறையில் கோரிய குற்றத்தை மாற்றுத்திறனாளி ஒருவர் (OKU) மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினார்.
பார்வைக் குறைபாடுள்ள 52 வயதான தான் கோக் குவான் காப்புறுதி இழப்பீட்டைப் பெறுவதற்காக வேண்டுமென்றே தன்னுடைய இடது கண்ணில் காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டத்தின் 511வது பிரிவின் கீழ் ஒரு வருடத்திற்கு குறையாத மற்றும் 10 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும்அ பராதமும் விதிக்கப்படலாம்.
குற்றம் சாட்டப்பட்டவரை RM10,000 பிணையில் விடுவிக்க மாஜிஸ்திரேட் சித்தி சுலைகா நோர்டின் @ கானி அனுமதித்தார். மேலும் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக வழக்கை மீண்டும் பிப்ரவரி 20 திகதிக்கு ஒத்தி வைத்தார்
– பெர்னாமா


