சியோல், டிச. 31- நாட்டில் இராணுவச் சட்டத்தை அமல் செய்ததால் பதவி
பறிப்புத் தீர்மானத்தை எதிர்நோக்கியுள்ள தென் கொரிய அதிபர் யூன் சுக்
இயோலை கைது செய்வதற்கு சட்ட அமலாக்கத் துறையினர் சமர்ப்பித்த
மனுவை சியோல் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதன் வழி, பதவியில் இருக்கும்ட போது கைது நடவடிக்கைக்கு ஆளாகும்
முதல் தென் கொரிய அதிபராக சுக் இயோல் விளங்குகிறார்.
தோல்வியில் முடிந்த டிசம்பர் 3 இராணுவச் சட்ட அமலாக்கம்,
கிளர்ச்சிக்கு திட்டமிட்டது மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகிய
குற்றச்சாட்டுகள் தொடர்பில் யூனுக்கு எதிராக கைது ஆணை
பிறப்பிக்கப்பட்டுள்ளதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறியது.
குறுகிய கால இராணுவச் சட்ட அமலாக்கம் தொடர்பான விசாரணையில்
ஆஜராகும்படி ஊழல் தடுப்பு நிறுவனம் அனுப்பிய மூன்று சம்மன்களையும்
யூன் புறக்கணித்த காரணத்தால் இந்த கைது ஆணையை உயர் மட்ட
அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல்களுக்கான விசாரணை அலுவலகம்
சார்வு செய்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
யூனை காவலில் எடுத்து விசாரிப்பதற்கும் கைது ஆணையைச் சார்வு
செய்வதற்கும் அந்த அலுவலகத்திற்கு 48 மணி நேர அவகாசம்
வழங்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 3ஆம் தேதி தென் கொரியாவில் இராணுவச் சட்டத்தை
யூன் பிரகனப்படுத்தினார். எனினும் அந்த சட்டம் ஆறு மணி நேரம்
மட்டுமே அமலில் இருந்த அந்த சட்டத்தை நாடாளுமன்றம்
வாக்கெடுப்பின் வழி அகற்றியது.
இதனைத் தொடர்ந்து யூனுக்கு எதிராக கடந்த டிசம்பர் 14ஆம் தேதி பதவி
பறிப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்த எதிர்க்கட்சி கட்டுப்பாட்டிலான
நாடாளுன்றம், பணிகளை மேற்கொள்வதிலிருந்து அவரை இடை நீக்கம்
செய்தது.


