NATIONAL

காஸாவில் மோசமடையும் சுகாதாரம் - மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களை நிறுத்த கோரிக்கை

31 டிசம்பர் 2024, 2:46 AM
காஸாவில் மோசமடையும் சுகாதாரம் - மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களை நிறுத்த கோரிக்கை

ரமல்லா, டிச. 31- காஸா தீபகற்பத்தில் சுகாதார நிலை மோசமான

அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின்

தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அட்ஹானோம் கிப்ரியேசுஸ் கூறினார்.

மருத்துவமனைகள் மீதானத் தாக்குதல்களை நிறுத்துங்கள். காஸா

மக்களுக்கு மருத்துவ உதவி உடனடியாகத் தேவைப்படுகிறது. அதே

சமயம், மனிதாபிமான பணியாளர்களுக்கு மருத்துவ உதவிகளை

வழங்குவதற்கான அனுமதியும் தேவைப்படுகிறது என்று அவர் கூறியதாக

பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா) தெரிவித்தது.

காஸா நகரிலுள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மற்றும் அல்- வாஃபா

புனர்வாழ்வு மருத்துவமனை இஸ்ரேலின் தாக்குதலுக்கு

இலக்காகியுள்ளதால் அவ்விரு மருத்துவமனைகளும் கடுமையாகச்

சேதமடைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

உலக சுகாதார நிறுவனம் தனது சகாக்களின் உதவியுடன் இந்தோனேசிய

மருத்துவமனைக்கு முக்கிய மருந்துகள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட

பொருள்களை அனுப்பியுள்ளதாக அவர் சொன்னார்.

மருத்துவச் சிகிச்சைப் பெறுவதில் நோயாளிகளுக்கு உள்ள உரிமையை

மதிக்கும்படி ஆதிக்கத் தரப்பினரை டெட்ருஸ் வலியுறுத்தினார்.

அதே சமயம், இஸ்ரேலியப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள கமால்

அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஹூசாம் அபு

சாபியாவை உடனடியாக விடுவிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலின்

தாக்குதல் தொடங்கியது முதல் இதுவரை காஸா தீபகற்பத்தில் சுமார் 1,060

சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 310 பேர் கைது

செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, மேலும் பலர் காயங்களுக்குள்ளாகியுள்ள

நிலையில் 130 ஆம்புலன்ஸ் வாகனங்களும் அழிக்கப்பட்டன.

காஸாவுக்கு கொண்டு வரப்படும் மருந்துகளின் அளவு காஸாவில்

அதிகரித்து வரும் மருந்துகளின் தேவையை ஈடு செய்யும் அளவில்

இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.